பெண்ணிடம் நகை பறித்து விட்டு கணவனை காரில் கடத்திய கும்பல்

தச்சம்பட்டு அருகே தம்பதி முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலியை பறித்த கும்பல் அவரது கணவரை கை, கால்களை கட்டி வைத்து காரில் கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-12-09 13:52 GMT

வாணாபுரம்

தச்சம்பட்டு அருகே தம்பதி முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலியை பறித்த கும்பல் அவரது கணவரை கை, கால்களை கட்டி வைத்து காரில் கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நகை மதிப்பீட்டாளர்

தச்சம்பட்டு அருகே உள்ள அள்ளிக்கொண்டாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 39), நகை மதிப்பீட்டாளர். இவரது மனைவி உமாமகேஸ்வரி (32).

இந்த நிலையில் நேற்று இருவரும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது பகல் 3 மணி அளவில் 4 பேர் கொண்ட கும்பல் அந்தோணிராஜின் வீட்டுக்குள் திடீரென புகுந்தனர்.

அவர்கள் வந்த வேகத்திலேயே கணவன்-மனைவி இருவரின் முகத்திலும் மிளகாய் பொடி தூவி உள்ளனர்.

நகை பறிப்பு

இதனையடுத்து அவர்கள் உமாமகேஸ்வரியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அந்தோணிராஜின் கை, கால்களை கட்டி காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் 4 பேரும் உமாமகேஸ்வரியை செல்போனில் தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தால் உன் கணவரை கொன்று விடுேவாம் என மிரட்டியுள்ளனர்.

அதனை ெபாருட்படுத்தாத உமாமகேஸ்வரி தச்சம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணி ராஜை கடத்தியவர்களை தேடி வந்தனர்.

4 பேர் கைது

அவர்களது விசாரணையில், அந்தோணிராஜை கடத்தி சென்றது திருப்பத்தூர் நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (34) ஜெய் என்ற ஜெகதீசன் (36) சசிகுமார் (20), முனிராஜ் (40) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அந்தோணிராஜை போலீசார் மீட்டு 4 பேரையும் கைது செய்தனர். மேலும் எதற்காக அந்தோணிராஜை கடத்தி சென்றனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்