மோட்டார்சைக்கிள், நாட்டு துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பி ஓடிய கும்பல்

குடியாத்தம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வந்த கும்பல், அதிகாரிகளை பார்த்ததும் மோட்டார்சைக்கிள், நாட்டு துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

Update: 2022-10-16 15:30 GMT

குடியாத்தம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வந்த கும்பல், அதிகாரிகளை பார்த்ததும் மோட்டார்சைக்கிள், நாட்டு துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

வனவிலங்குகள் வேட்டை

குடியாத்தம் வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன குறிப்பாக யானைகள், சிறுத்தைகள், கரடி, மர நாய்கள் உள்ளன அதேபோல் நூற்றுக்கணக்கில் புள்ளி மான்களும் உள்ளன. அதனால் இந்தப்பகுதியில் அடிக்கடி புள்ளிமான்களை வேட்டையாடி இறைச்சியை விற்று வருகின்றனர்.

மான்களை வேட்டையாடுபவர்கனை வனத்துறையினர் கைது செய்து, அபராதம் விதித்து வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து மான்களை வேட்டையாடி வருகின்றனர்.

துப்பாக்கியை போட்டுவிட்டு ஓட்டம்

இந்த சம்பவங்களை தொடர்ந்து வேலூர் மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ்குமார், உதவி வனப் பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுமாறு வனத்துறையினருக்கு உத்தரவிட்டார். அவர்களின் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா தலைமையில் வனவர் மாசிலாமணி உள்ளிட்ட வனத்துறையினர் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் கொட்டாளம் வனப்பகுதி அருகே ரோந்து சென்றனர்.

அப்போது ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து தமிழக பகுதிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் வந்து கொண்டிருந்தனர். ரோந்து சென்ற வனத்துறையினரை கண்டவுடன் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது. வனத்துறையினர் சென்று பார்த்தபோது மோட்டார் சைக்கிளுடன் நாட்டு துப்பாக்கி, டார்ச் லைட் மற்றும் வேட்டையாட பயன்படுத்தும் உபகரணங்கள் கிடந்தது.

விசாரணை

இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றிய குடியாத்தம் வனத்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திராவில் இருந்து வந்த அந்த கும்பல் வனவிலங்கு அல்லது மானை வேட்டையாடி அதனை விற்க வந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்