சூதாட்டம் நடத்தியவர் சிக்கினார்

திருக்கோவிலூர் அருகே சூதாட்டம் நடத்தியவர் போலீசில் சிக்கினார்.

Update: 2023-05-31 19:54 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள துலாம்பூண்டி கிராமத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்போில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது துலாம்பூண்டி பஸ் நிறுத்தம் பின்புறம் சோதனை செய்த போது அங்கு சிலா் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் சூதாடிக்கொண்டிருந்தவர்கள் தப்பிக்க முயன்றனர். அப்போது போலீசார் ஒருவரை மட்டும் விரட்டி பிடித்தனர். விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த காத்தமுத்து மகன் செந்தில் (வயது 38) என்பதும், சூதாட்டம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய திருக்கோவிலூரை சேர்ந்த தர்மா, மாயக்கண்ணன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்