மத்திய அரசு வழங்கும் நிதியை முறையாக செலவு செய்ய வேண்டும்

பட்டியல் இன மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை முறையாக செலவு செய்ய வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.

Update: 2023-03-13 18:45 GMT

பனைக்குளம், 

ராமநாதபுரம் அரண்மனை முன்பு நேற்று மாலை பா.ஜ.க. (எஸ்.சி) அணி கூட்டம் மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜனதா மாவட்ட தலைவர் இ.எம்.டி. கதிரவன், மாவட்ட துணைத்தலைவர் முத்துசாமி, ஐகோர்ட்டு வக்கீலும், பா.ஜனதா பிரமுகருமான சண்முகநாதன், மாநில எஸ்.சி. அணி செயலாளர் பிரபு, நகர் தலைவர் சுப நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கண்ணன், மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் சேகர், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் பாரதிராஜன், மாவட்ட பொது செயலாளர் காளிராஜா, மற்றும் நேதாஜி உள்பட பா.ஜனதா மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதைத்தொடர்ந்து அம்பேத்கர் உருவம் போன்று மேடையில் அமர வைத்து நேரடியாக கோரிக்கை மனு அளிப்பது போன்று ஏற்பாடு செய்யப்பட்டு பா.ஜனதா நிர்வாகிகள் மனு வழங்கினார்கள். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு பட்டியல் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிதியினை மாநில அரசுகள் தங்களின் மாநிலத்தில் உள்ள பட்டியல் சமுதாய மக்களுக்கு செலவு செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்தில் ஆட்சி புரிந்து வரும் திராவிட கட்சிகள் மத்திய அரசு ஒதுக்கும் சிறப்பு உட்கூறு திட்ட நிதி மற்றும் பட்டியல் சமூகத்திற்கான துணைத்திட்டம் நிதியினை முறையாக செலவு செய்யாமல் திருப்பி அனுப்புவதும், தங்கள் மனம் போன போக்கில் செலவு செய்வதும், வாடிக்கையாகவே உள்ளது. பட்டியல் சமுதாயம் இன்றளவும் இலவச மனை பட்டா கேட்கும் வீடு இல்லாமலும் வாழும் நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது. கல்வி வேலை வாய்ப்பு கிடைக்காமல் பின்தங்கி உள்ளனர். எனவே மத்திய அரசு வழங்கும் நிதியை முறையாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்