சபாநாயகர் அப்பாவுக்கு பிரான்ஸ் தம்பதி நன்றி

குழந்தைகளுக்கு தமிழ்வழி பள்ளியில் இடம் கிடைக்க பரிந்துரை செய்ததை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவுக்கு பிரான்ஸ் தம்பதி நன்றி தெரிவித்தனர்.

Update: 2022-09-10 20:12 GMT

வள்ளியூர்:

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் கரவேல் தியாகராஜன் (வயது 39). பிரான்ஸ் நாட்டில் பணிபுரியும் இவர், அந்நாட்டைச் சேர்ந்த லூலூ (36) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு மாக்ஸோன் மகாவேல் (7), ஷிபா குருவேல் (6), சிமியோ வேல் (3) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் பிரான்ஸ் நாட்டில் வசித்தாலும், குழந்தைகளை சொந்த ஊரான மதுரை பகுதியில் தமிழ்வழியில் சேர்த்து பயிற்றுவிக்க விரும்பினர். இதற்கு முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதம் தேவைப்பட்டது. இதற்காக அந்த தம்பதி, சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து மனு வழங்கினர். இதனை ஏற்ற சபாநாயகர், அந்த தம்பதிக்கு பரிந்துரை கடிதம் வழங்கினார்.

தொடர்ந்து அந்த தம்பதியின் 3 குழந்தைகளும் தமிழ்வழி பள்ளியில் படிக்க இடம் கிடைத்தது. இதையடுத்து கரவேல் தியாகராஜன்- லூலூ தம்பதி தங்களது 3 குழந்தைகளுடன் நேற்று சபாநாயகர் அப்பாவுவை அவரது சொந்த ஊரான பணகுடி அருகே லெப்பைகுடியிருப்பில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்