குரங்குகளை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்

கண்ணமங்கலம் பகுதியில் குரங்குகளை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.

Update: 2023-09-01 15:03 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் குரங்குகள் மற்றும் நாய்கள் தொல்லையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் குரங்குகளை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.சி.முனிசாமி கூறுகையில், சந்தவாசல் வனத்துறையினர் மூலம் கண்ணமங்கலம் பகுதியில் 100-க்கும் குரங்குகளை பிடித்து காட்டில் விடப்பட்டது.

விரைவில் கால்நடை துறையினர் உதவியுடன் நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படும். என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்