ஆம்பூர் அருகே தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது

ஆம்பூர் அருகே தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-12-11 11:24 GMT

தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கனமழை பெய்து வந்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக ஆம்பூர் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பச்சகுப்பம் பகுதியில் இருந்து குடியாத்தம் மற்றும் நரியம்பட்டு பகுதிகளை இணைக்கும் தரைப்பாலத்தில் வெள்ளம் ஏற்பட்டு தரை பாலத்தின் மீது நீர் வழிந்து பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஆபத்தை உணராமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம் வழியாக சென்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஆம்பூர் தாசில்தார் மகாலட்சுமி ஆகியோர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருபுறமும் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்