சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மடியேந்தும் போராட்டம்

கள்ளக்குறிச்சியில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மடியேந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-30 19:12 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மடியேந்தும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் விஜியா தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சுலைமான், சாந்தி, மாவட்ட இணை செயலாளர் சந்திரமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் காஞ்சனா மேரி, மாவட்ட தலைவர் வேலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் அனைத்து சத்துணவு ஊழியர்களும் கலந்து கொண்டு மடிஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல், இணைச்செயலாளர் ரசிதா, நிர்வாகிகள் ராஜகுமாரி, சத்யா, ரவி, வீரபத்திரன் உள்பட 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்