மேட்டூர் அணைக்கு நீர்வரத்துஆயிரம் கனஅடிக்கு கீழ் குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கனஅடிக்கு கீழ் குறைந்தது

Update: 2023-01-20 19:40 GMT

மேட்டூர், 

மேட்டூர் அணைக்கு கடந்த சில வாரங்களாக நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் வரை வினாடிக்கு ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நீர்வரத்து நேற்று காலை குறைந்து வினாடிக்கு 883 கன அடி வீதம் வந்து கொண்டு இருந்தது.

அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்தானது தண்ணீர் திறப்பை விட குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 107.79 அடியாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்