மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது

கடலூர் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது

Update: 2023-04-14 20:04 GMT

கடலூர் முதுநகர், 

கடலூர் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சோனங்குப்பம், அக்கரைகோரி, ராசா பேட்டை, சித்திரை பேட்டை, சொத்திகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். அவ்வாறு பிடித்து வரப்படும் மீன்களை, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள். மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் மாதம ்14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்கலாம் அமலில் இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் இன்று (சனிக்கிழமை) அதிகாலை முதல் தொடங்கி ஜூன் 14-ம் தேதி வரை அமல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக அனைத்து விதமான விசைப்படகுகளும் நேற்று மாலை கரைக்கு திரும்பி விட்டன. பின்னர் மீனவர்கள் தங்களது படகுகளை கடலூர் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.இருப்பினும் நாட்டுமர மற்றும் பைபர் படகுகள் 5 நாட்டிகல் மயிலுக்குள் சென்று மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் பரங்கிப்பேட்டை, முடசல் ஓடை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீனவர்கள் தங்களது படகுகளை அந்தந்த பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்