மீன் பிடித்து கொண்டிருந்த படகு நடுக்கடலில் திடீரென மூழ்கியது

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகு திடீரென கடலில் மூழ்கியது. அதில் இருந்த 6 மீனவர்களும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

Update: 2022-06-19 18:23 GMT

ராமேசுவரம்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகு திடீரென கடலில் மூழ்கியது. அதில் இருந்த 6 மீனவர்களும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கடலில் விசைப்படகு மூழ்கியது

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இதனிடையே ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த பாதுவைராஜன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பிரகாஷ், டல்லஸ், எபிரோன், முனுசாமி, பாண்டி, எமரிட் ஆகிய 6 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது வழக்கத்துக்கு மாறாக வீசிய பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தால் படகின் பலகை உடைந்து கடல் நீர் உள்ளே புகுந்தது. திடீரென படகானது மூழ்க தொடங்கியது. சிறிது நேரத்தில் படகு கடலில் மூழ்கியது.

6 மீனவர்கள் மீட்பு

அப்போது அந்த படகில் இருந்த 6 மீனவர்களும் உயிருக்கு போராடிய நிலையில் கடலில் தத்தளித்தனர். அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள், கடலில் தத்தளித்த 6 பேரையும் உயிருடன் மீட்டு பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்