மீன்களை கடலில் கொட்டிய மீனவர்களால் பரபரப்பு
உவரியில் மீன்களை கடலில் கொட்டிய மீனவர்களால் பரபரப்பு ஏற்பட்டது
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் உவரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை மீனவர்கள் பயன்படுத்துகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்குமார், ஆய்வாளர் உத்திராண்டு ராமன், உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன், கடலோர காவல்படை சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாறன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். உவரி கடற்கரை, சோதனைச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் இரவு பகலாக கண்காணித்தனர். இந்த நிலையில் உவரியில் இருந்து 6 நாட்டு படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று காலையில் மீன்களை கரைக்கு கொண்டு வராமல், கடலில் கொட்டினர். பின்னர் அவர்கள் படகுகளில் கரைக்கு திரும்பி வந்தனர். இதனால் கடலோர பகுதிகளில் அதிகளவில் மீன்கள் மிதந்ததால் பரபரப்பு நிலவியது.