பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது
புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் கால யாகசாலை பூஜை தொடங்கி உள்ளது.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் புகழிமலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து நாளை (திங்கட்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று காலை விநாயகர் வழிபாடு, புனிததீர்த்தங்கள் வழிபாடு, திருமுறை பாராயணம், புண்யாகம், கும்ப அலங்காரம், யாத்ரா தானம், அருள் சக்தி கலசங்கள் யாகசாலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாலையில் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. யாகசாலையில் அக்னிகுண்டம் வளர்க்கப்பட்டு, ஏராளமான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.