85 நூலகங்களுக்கு போட்டித்தேர்வுக்கான 13 ஆயிரம் நூல்கள் முதல்-அமைச்சர் வழங்கினார்

மதுரை மாவட்டத்தில் உள்ள 85 நூலகங்களுக்கு போட்டித் தேர்வுக்கான 13 ஆயிரம் நூல்கள் மற்றும் நூல் அடுக்குகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2022-06-17 23:52 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக மதுரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், மதுரை மாவட்டத்தில் உள்ள நூலகங்களுக்கு போட்டித் தேர்வுக்கான ரூ.30 லட்சம் மதிப்பிலான 13 ஆயிரம் நூல்கள் மற்றும் நூலடுக்குகளை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

மேலும், மதுரை நூலகத்தைச் சேர்ந்த நூலகர்களுக்கு அந்நூல்களை வழங்கினார்.

கிராமப்புற மாணவர்களுக்கு பயன்

கிராமப்புற மாணவர்களும் போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்கான வசதியை ஏற்படுத்தித்தரும் நோக்கத்துடன் சு.வெங்கடேசன் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெறப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான 164 நூல்கள் கொண்ட தொகுப்பை, மதுரை மாவட்டத்தில் உள்ள மாவட்ட மைய நூலகம், முழுநேர நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் மற்றும் கிளை நூலகங்கள் ஆகிய 85 நூலகங்களுக்கு முதல்-அமைச்சர் வழங்கினார். மேலும், அனைத்து நூலகங்களுக்கும் இரும்பு புத்தக அடுக்குகளையும் வழங்கினார்.

பங்கேற்றோர்

இந்த நிகழ்ச்சியில், தலைமைச்செயலகத்திலிருந்துநிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சு.வெங்கடேசன் எம்.பி., பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பொது நூலக இயக்குனர் (பொறுப்பு)க.இளம்பகவத், மதுரையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், எம்.எல்.ஏ.க்கள் ஏ.வெங்கடேசன், எம்.பூமிநாதன், துணை மேயர் டி.நாகராஜன், மதுரை மாவட்ட கலெக்டர் எஸ்.அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், நூலகர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்