கரூா் மாவட்டத்தில் அக்னிநட்சத்திரம் சாரல் மழையுடன் நிறைவடைந்தது

கரூா் மாவட்டத்தில் கோடையில் அக்னிநட்சத்திரம் சாரல் மழையுடன் நிறைவடைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-05-28 17:50 GMT

கரூர், 

கரூர் மாவட்டத்தில்அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்பு வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வெயிலால் ஏற்படும் உடல் உபாதைகளை தடுப்பதற்காக குளிர்ச்சி தரக்கூடிய உணவு வகைகளான தர்பூசணி, நூங்கு, வெள்ளரி பிஞ்சுகளை சாப்பிட்டும், இளநீர், பழ ஜூஸ்களையும் அருந்தியும் வருகின்றனர்.வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சாலையில் நடந்து செல்பவர்கள் குடைகளை பிடித்தப்படி செல்வதையும் காணமுடிகிறது. பெண்கள் சிலர் சேலை, துப்பட்டாவால் தலையை மூடியபடியும் செல்கின்றனர்.

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தது. கரூரில் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் சுமார் 5.30 மணியில் இருந்து 6 மணி வரை அரை மணி நேரம் சாரல் மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளிலும் மழை பெய்தது. நிறைவடையும் போதும் மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்