தீபாவளி பண்டிகை களைகட்ட தொடங்கியது ஜவுளிகள் வாங்க கடை வீதிகளில் குவிந்த பொதுமக்கள்

தீபாவளி பண்டிகை களைகட்ட தொடங்கியதால், ஜவுளிகள் வாங்க கடை வீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

Update: 2022-10-09 21:40 GMT

தீபாவளி பண்டிகை களைகட்ட தொடங்கியதால், ஜவுளிகள் வாங்க கடை வீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடைகளை வாங்கி வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஈரோடு கடைவீதிகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் ஏராளமானவர்கள் திரண்டு வந்திருந்தார்கள். இதனால் தற்போது இருந்தே தீபாவளி பண்டிகை களைகட்ட தொடங்கியது.

குறிப்பாக ஈரோடு மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, ஆர்.கே.வி.ரோடு, நேதாஜிரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய இடங்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தீபாவளி விற்பனை சூடுபிடிக்க தொடங்கி இருப்பதால் ஜவுளிக்கடைக்காரர்களும் உற்சாகம் அடைந்து உள்ளனர். கடை வீதி வழியாக நடந்து சென்றவர்களை தங்களது கடையில் வந்து ஜவுளி வாங்கும்படி கடை ஊழியர்கள் அழைத்து வண்ணம் காணப்பட்டனர்.

போக்குவரத்து நெரிசல்

இதேபோல் சாலையோர கடைகளும் புதிதாக முளைத்து உள்ளன. பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் மணிக்கூண்டு பகுதியில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பொதுமக்கள் அங்கு அதிகமாக திரண்டதால் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்