காளைவிடும் திருவிழா

கண்ணமங்கலம் அருகே காளைவிடும் திருவிழா நடந்தது.

Update: 2023-05-01 10:07 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சி மங்கலாபுரம் கிராமத்தில் காளைவிடும் திருவிழா நடைபெற்றது.

விழாவில் 150-க்கும் மேற்பட்ட காளைகள் வீதியில் வேகமாக ஓடவிடப்பட்டன. இதில் வேகமாக ஓடி முதலிடம் முதல், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்ற காளைகளுக்கு தலா ஒரு மோட்டார் சைக்கிள் உள்பட 61 காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

பாதுகாப்பு ஏற்பாடுகளை சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் செய்திருந்தனர். வேகமாக ஓடிய காளைகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிலரை முட்டியதில் லேசான காயமடைந்தனர். .

இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் மங்கலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர் குப்புசாமி, விழா குழுவினர், இளைஞர்கள் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்