மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்றுதொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-06-26 12:18 GMT

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்றுதொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில மாநாடு

தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்க மாநில மாநாடு வேலூர் டோல்கேட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் எல்.மணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. அலுவலர் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் சினேகலதா, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கோபி, உருதுவழி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் முகமது ஷாநவாஸ், தமிழக தமிழாசிரியர் கழக மாநில துணை செயலாளர் வாரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி வேளாண்மை ஆசிரியர்கள் கழக மாநில பொருளாளர் ராமன் வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவரும், திருப்பூர் எம்.பி.யுமான கே.சுப்பராயன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக சிறப்பு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்

மாநாட்டில், தமிழ்நாட்டில் மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்ததுபோன்று ஆசிரியர்களுக்கும் பணிபாதுகாப்பு சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். கோர்ட்டு அனுமதி மற்றும் அரசாணையின் அடிப்படையில் கடந்த 2009-ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட 7 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட ஊதிய வேறுபாடுகளை களைந்திட வேண்டும். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை 2016-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டும் என்பது உள்பட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து சங்க மாநில தலைவராக அர்ச்சுனன், மாநில பொதுச்செயலாளராக எல்.மணி, பொருளாளராக கிருபாகரன் உள்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், தமிழக அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில செயலாளர் விஜயன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் நந்தகுமார் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க நிர்வாகி சேகர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்