தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்த மாணவி
தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பிளஸ்-2 தேர்வை மாணவி நேற்று எழுதி முடித்தார். பின்னர் வீடு திரும்பி இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.
கமுதி,
தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பிளஸ்-2 தேர்வை மாணவி நேற்று எழுதி முடித்தார். பின்னர் வீடு திரும்பி இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.
பிளஸ்-2 மாணவி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 53). கூலி ெதாழிலாளி. இவர் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது மூத்த மகள் சென்னையில் திருமணமாகி வசித்து வருகிறார்.
தந்தை இறந்த தகவல் தெரிந்ததும் அவர் குடும்பத்துடன் சென்னையில் இருந்து கமுதி புறப்பட்டு வந்து விட்டார்.
முத்துப்பாண்டியின் மற்றொரு மகள் முத்துமாரி, பிளஸ்-2 மாணவி ஆவார். நேற்று அவருக்கு 12-ம் வகுப்பில் கடைசி தேர்வு ஆகும்.. தந்தை இறந்து அவரது உடல் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தது.
பிளஸ்-2 தேர்வு எழுதினார்
அவரது உடல் அருகே முத்துமாரி கதறி அழுது ெகாண்டிருந்தார். கடைசி தேர்வு என்பதால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மாணவி முத்துமாரியை தேற்றி, தேர்வு எழுதி விட்டு வரும்படி கூறினர்.. அதன்பிறகு இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ளலாம் எனவும் கூறி இருக்கிறார்கள்.
இதை தொடர்ந்து மாணவி முத்துமாரி, கமுதியில் உள்ள கலாவிருத்தி மேல்நிலைப்பள்ளிக்கு தேர்வு எழுத சென்றார். அங்கு அவர் தனது தேர்ைவ எழுதி முடித்தார். அப்போது ஆய்வுக்கு வந்த கல்வித்துறை துணை இயக்குனர் வெற்றிச்செல்வி, தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய மாணவிக்கு ஆறுதல் கூறினார்.
சோகம்
தேர்வு முடிந்தவுடன் மாணவியை உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு தந்தைக்கு அந்த மாணவி இறுதி சடங்குகள் செய்தார். இந்த நிகழ்வு அனைவரின் மனதையும் உருக்கியது.