மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற முயன்ற தந்தை பலி

மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற முயன்ற தந்தை 15 அடி உயரத்திலிருந்து விழுந்து பலியானார்.

Update: 2023-04-28 17:24 GMT

வந்தவாசி

மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற முயன்ற தந்தை 15 அடி உயரத்திலிருந்து விழுந்து பலியானார்.

குடும்பம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த படூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 35), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு 2 மகன்கள். அட்சிதா (4) என்ற மகள் உள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு விஜயகுமார் தனது மகளுடன் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, கைப்பிடிச்சுவரில் நின்று விளையாடிக் கொண்டிருந்த அட்சிதா திடீரென தனது கீழே விழுந்தாள். அவரை விஜயகுமார் பிடிக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக 15 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் இறந்து விட்டார்.ஆபத்தான நிலையில் உள்ள அட்சிதா மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள்.

புகார்

இதுதொடர்பாக விஜயகுமாரின் சித்தப்பா சேட்டு, தெள்ளார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடியில் இருந்து தவறி விழுந்த மகளை காப்பாற்ற முயன்ற தந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்