வயல் வழியாக இறந்தவர் உடலை எடுத்துச் செல்லும் அவலம்
வலங்கைமான் அருகே, சாலை வசதி இல்லாததால் இறந்தவர் உடலை வயல் வழியாக எடுத்துச் செல்லும் அவலநிலை நீடிக்கிறது
வயல் வழியாக...
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இறந்த ஆண் ஒருவரின் உடலை மிகவும் சிரமத்துடன் வயலில் இறங்கிதான் உறவினர்கள் தூக்கிச் சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் யாரேனும் இறந்தால் அவரது உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல பாதை வசதி கிடையாது. இதனால், மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள வயலில் இறங்கித் தான் இறந்தவர் உடலை தூக்கிச் செல்ல நேரிடுகிறது. இந்தநிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. மயானத்திற்கு சாலை வசதி செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இன்று வரை பாதை வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
பாதை வசதி வேண்டும்
மேலும், மழைக்காலங்களில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். ஆகவே, நரசிங்கமங்கலம் கிராமத்தில் இருந்து மயானத்திற்கு செல்ல சாலை வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.