விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-10 19:32 GMT

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலை அருகே திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம், விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை திருச்சி கிழக்கு மாநகர தி.மு.க. செயலாளர் மதிவாணன் தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர்கள் சுப்பிரமணி, கார்த்திகேயன், பொன்னுச்சாமி, ஜெய் செல்வம், மணிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணிப்பூர் மாநிலத்தில் இனக் கலவரம், படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2 சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இனக்கலவரமாக உருவெடுத்து மணிப்பூர் மாநிலமே பற்றி எரிகிறது. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் ஜெகமுருகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராஜா, தி.மு.க. பொறியாளர் அணி என்ஜினீயர் தென்னரசு ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்