நண்பர்களால் தாக்கப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு

நண்பர்களால் தாக்கப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2022-08-17 19:00 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியவடகரையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31), விவசாயி. இவரும், அதே ஊரை சேர்ந்த கவுதமன் (19), வெண்பாவூரை சேர்ந்த மதிவாணன் (25), சிறுகுடலை சேர்ந்த வெங்கடேசன் (27) ஆகியோர் நண்பர்கள் ஆவார். இவர்கள் 4 பேரும் கடந்த வாரம் பெரியவடகரையில் மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சுரேசை மதிவாணன், கவுதமன், வெங்கடேசன் ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சுரேசை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து கவுதமன், மதிவாணன், வெங்கடேசன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து கொலை முயற்சி வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்