கிணற்றில் விழுந்து விவசாயி சாவு

கந்தம்பாளையம் அருகே கிணற்றில் விழுந்து விவசாயி இறந்தார்.

Update: 2022-10-14 18:33 GMT

கந்தம்பாளையம்

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள திடுமல் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தேவராஜ் மகன் வேலுசாமி (வயது35). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் வேலுச்சாமி அவரது தாத்தாவுடன் விவசாயம் செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் வேலுசாமிக்கு மது குடிப்பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் வேலுசாமி கடந்த மாதம் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் நேற்று காலை வேலுசாமி அவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்ததை பார்த்து அவரது தாத்தா நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நல்லூர் போலீசார் கிணற்றில் கிடந்த வேலுசாமியின் உடலை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்