பள்ளத்தில் தவறி விழுந்த விவசாயி சாவு

சாலை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த விவசாயி சாவு

Update: 2023-01-23 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள குலதீபமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 70) விவசாயி. சம்பவத்தன்று வயலுக்கு சென்று வருவதாக கூறி சென்ற இவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர்.

அப்போது குச்சிப்பாளையம் கிராமத்தில் திருக்கோவிலூர்-திருவண்ணாமலை சாலையை அகலப்படுத்தும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஆறுமுகம் இறந்து கிடந்தார். வயலுக்கு செல்லும் வழியில் அவர் சாலையை அகலப்படுத்துவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்