மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு
செஞ்சி அருகே மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
செஞ்சி,
செஞ்சி அடுத்த அனந்தபுரம் அருகே உள்ள வரிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 45) விவசாயி. இவர் தனது நிலத்திலிருந்து மாட்டு வண்டியில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மாடு மிரண்டு ஓடியதால் வண்டியில் இருந்த கணேசன் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.