பாம்பு கடித்த பதற்றத்தில் ஓடிய விவசாயி கீழே விழுந்து சாவு

தா.பேட்டை அருகே இரவில் தண்ணீர் பாய்ச்ச தோட்டத்திற்கு சென்ற போது பாம்பு கடித்த பதற்றத்தில் ஓடிய விவசாயி கீழே விழுந்து இறந்தார்.

Update: 2023-04-14 19:08 GMT

தா.பேட்டை அருகே இரவில் தண்ணீர் பாய்ச்ச தோட்டத்திற்கு சென்ற போது பாம்பு கடித்த பதற்றத்தில் ஓடிய விவசாயி கீழே விழுந்து இறந்தார்.

விவசாயி

திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த மாவலிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 48). விவசாயி. இப்பகுதியில் விவசாய தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டார்களை இயக்க மும்முனை மின்சாரம் இரவு 10 மணிக்கு பிறகுதான் வினியோகிக்கப்படுகிறது.

இதனால் விவசாயிகள் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச இரவு 10 மணிக்கு பிறகுதான் செல்வது வழக்கம். சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தி இரவு நேரத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்கு நடந்து சென்றார். அப்போது, தோட்டத்தில் படுத்து இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது.

சாவு

இதனால் பதறிப்போன கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து ஓடியபோது தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட அருகே உள்ள தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சு கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததுடன், விஷமும் உடலில் ஏறி இருந்ததால் கிருஷ்ணமூர்த்தி நேற்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெம்புநாதபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்