விவசாயி மயங்கி விழுந்து சாவு
பூதப்பாண்டி அருகே வாழைப்பயிருக்கு பூச்சி மருந்து அடித்த விவசாயி மயங்கி விழுந்து சாவு
அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டி அருகே உள்ள அரும நல்லூர் சாஸ்தான் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் நேசையன் (வயது 68), விவசாயி. இவர் 4 நாட்களுக்கு முன்பு, வாழைத்தோட்டத்தில் வாழைப்பயிருக்கு பூச்சி மருந்து அடித்தார். அப்போது எதிர் பாராத விதமாக நேசையன் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவருடைய மனைவி, அருகில் வசிப்பவர்களின் உதவியுடன் நேசையனை 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். வாழைப்பயிருக்கு பூச்சி மருந்து அடித்த போது, அவர் சுவாசித்ததில், எதிர்பாராத விதமாக அவர் உடலுக்குள் பூச்சி மருந்து சென்று மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று காலையில் நேசையன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.