விஷம் குடித்து விவசாயி சாவு

Update: 2023-07-22 19:30 GMT

எடப்பாடி:-

எடப்பாடி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விவசாயி

எடப்பாடியை அடுத்த கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டையன் (வயது 75), இவர், நேற்று முன்தினம் இரவு எடப்பாடி- நெடுங்குளம் சாலையில் வெள்ளரி வெள்ளி ஏரிக்கரையில் மயங்கிய நிலையில் கிடந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள், செங்கோட்டையனை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆஸ்பத்திரியில் சாவு

அவருக்கு மயக்கம் தெளிந்த நிலையில் எடப்பாடி போலீசார், செங்கோட்டையனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், குடும்ப கஷ்டத்தில் மனம் உடைந்து விஷம் குடித்து விட்டதாக செங்கோட்டையன் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.

அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலையில் செங்கோட்டையன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்