மயங்கி விழுந்த விவசாயி சாவு

மயங்கி விழுந்த விவசாயி உயிரிழந்தார்.

Update: 2022-09-15 19:00 GMT

திண்டுக்கல் அருகே உள்ள மேட்டுப்பட்டி டிவைன் நகரை சேர்ந்தவர் வின்சென்ட் ஜோசப் (வயது 77). விவசாயி. இவர், மொட்டணம்பட்டி ரெயில்வே கேட் அருகே உள்ள தனது தோட்டத்து வீட்டில் தங்கி விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று தோட்டத்து வீட்டின் அருகே வின்சென்ட் ஜோசப் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


--------


Tags:    

மேலும் செய்திகள்