தீக்காயம் அடைந்த முதியவர் சாவு

தீக்காயம் அடைந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-07-17 18:14 GMT

 திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் பிச்சை (வயது 78). இவர் கடந்த 2 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் பிச்சை நெய்தலூர் காலனியில் உள்ள தனது மகள் ரஞ்சிதம் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கயிற்று கட்டிலில் படுத்து தூங்கும்போது எழுந்து புகை பிடித்துள்ளார்.

அப்போது மீதி இருந்த பீடித்துண்டை தெரியாமல் அவர் வைத்திருந்து போர்வையில் போட்டு விட்டு தூங்கி விட்டார். இதனால் அந்த போர்வையில் தீப்பிடித்து பிச்சை படுத்து தூங்கி கொண்டிருந்த கயிற்றின் கட்டிலில் பட்டு எரிந்தது. இதனால் படுத்து இருந்த பிச்சை எழுந்திருக்க முடியாமல் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிச்சையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்