பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தொடங்கியது

பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தொடங்கி உள்ளது.

Update: 2022-06-04 18:47 GMT

கரூர்,

கரூர் கோவை ரோட்டில் உள்ள கொங்கு மண்டபத்தில் ஸ்மார்ட் ஈவென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் 14-வது ஆண்டாக பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதனை கொங்கு அறக்கட்டளை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வள்ளுவர் கல்லூரி ேசர்மன் செங்குட்டுவன் குத்து விளக்கேற்றி வாழ்த்துரை வழங்கினார். ஆர்.வி.எஸ். கல்லூரி ஜோபி முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை, கோவை, பெங்களூரு, ஈரோடு, நாமக்கல் மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த 50-க்கும் ேமற்பட்ட மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், நர்சிங், பார்மசி, பாலிடெக்னிக் உள்பட்ட பல கல்லூரிகள் நேரடியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பேராசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.

மாணவர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட கல்லூரியில் சேர விரும்பினால் அங்கேயே ஸ்பாட் அட்மிஷன் நடைபெறுகிறது. அனைத்து படிப்புகளையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வசதியாக தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்மார்ட் ஈவென்ட்ஸ் இயக்குனர் ஜிவித் முன்னிலையில் ஸ்மார்ட் ஈவென்ட்ஸ் நிறுவனத்தின் மேலாளர் சரவணன், ஒருங்கிணைப்பாளர்கள் விஸ்வபாரதி, சுரேஷ், பிரதீப், வினோத் ஆகியோர் செய்திருந்தனர். இந்த கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடைபெறுவதாக ஸ்மார்ட் ஈவென்ட்ஸ் நிறுவனத்தின் ேமலாண்மை இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்