இ டெண்டரை ரத்து செய்ய வேண்டும்

இ டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2023-02-16 17:34 GMT

சோளிங்கர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் தனசேகரன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 10 பள்ளி கட்டிடங்கள், 11 அலுவலகம் பழுது பார்க்கும் பணிக்கு சுமார் ரூ.3 கோடியே 40 லட்சம் ஒதுப்பட்டுள்ளதை ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வழங்காமல், முறைகேடாக ஒன்றிய செயலாளர்களுக்கு வழங்கிதாக கூறி இ டெண்டரை ரத்து செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கவுன்சிலர்கள் ஒருமனதாக தெரிவித்தனர். அதற்கு ஈ டெண்டரை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்துதர வேண்டுமென கேட்டால் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாகவும், இ டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் என கவுன்சிர்கள் பேசினார்கள். கூட்டத்தை முடிக்காமல் அனைவரும் கலைந்து சென்றனர். கூட்டத்தை முறையாக நடத்த தெரியாத வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளரை மாற்றக்கோரி கவுன்சிலர்கள் ஒன்றியக் குழு தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து கலெக்டருக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஒன்றியக் குழு தலைவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்