வீட்டின் முன் தூங்கிய டிரைவர் வெட்டிக்கொலை
வீட்டின் முன் தூங்கிய டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
வையம்பட்டி:
வெட்டிக்கொலை
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரப்பூர் அருகே உள்ள தாழகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டியன்(வயது 31). டிரைவரான இவர் நேற்று மாலை வீட்டின் முன்பு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் முகம் மற்றும் கையில் பலத்த வெட்டு ஏற்பட்ட நிலையில், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார். பின்னர் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் ெதரிவித்தனர்.
காரணம் என்ன?
இதையடுத்து மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன், வையம்பட்டி இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தங்கபாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தங்கபாண்டியனை கொைல செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.