சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவர் போக்சோவில் கைது
சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கரூர் அருகே உள்ள உப்பிடமங்கலம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற பிரபாகரன் (வயது 25).டிரைவர். இவர் 15 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமி 4 கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து சிறுமியின் கொடுத்த புகாரின்பேரில் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பிரகாஷ் என்கிற பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.