லாரியில் தூங்கிய டிரைவர் மர்ம சாவு

தாந்தோணிமலை அருகே லாரியில் தூங்கிய டிரைவர் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2023-02-26 18:38 GMT

லாரி டிரைவர்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42). லாரி டிரைவர். இவர் கோவில்பட்டியில் இருந்து கரூருக்கு லாரியில் லோடு ஏற்றுவதற்காக வந்தார். பின்னர் தாந்தோணிமலை காளியப்பனூர் பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு லாரியிலேயே அயர்ந்து தூங்கி விட்டார்.

வெகுநேரம் ஆகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து அங்கிருந்தவர்கள் பாலமுருகனை பலமுறை எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதுகுறித்து உடனடியாக தாந்தோணிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சாவு

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பாலமுருகனை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாலமுருகனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து, பாலமுருகன் எப்படி இறந்தார்? அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்