செல்போன் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம்
செல்போன் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
செல்போன் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவர் குறித்து வேலூர் மண்டல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் அந்த டிரைவர் ஆம்பூர் பணிமனையை சேர்ந்த பிரதீப்குமார் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரை வேலூர் மண்டல போக்குவரத்துக்கழக பொது மேலாளர் கணபதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பஸ் டிரைவர்கள் செல்போனை பாக்கெட்டில் வைக்க கூடாது. கண்டக்டரிடம் கொடுத்து வைக்க வேண்டும். அவசரமாக யாராவது தொடர்பு கொண்டு பேசினால் சாலையோரம் பஸ்சை நிறுத்தி பேச வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் பஸ்சை ஓட்டியபடி செல்போன் பேசக்கூடாது என்று டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அதனை பின்பற்றாமல் ஆபத்தான முறையில் பஸ்சை இயக்கியதற்காக பிரதீப்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.