மனைவியின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட டிரைவர் மர்ம சாவுவேப்பூர் போலீசார் விசாரணை

மனைவியின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-03-06 19:41 GMT

ராமநத்தம், 

வேப்பூர் அடுத்த புல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சுரேஷ் (வயது 37), டிரைவர். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அனிதாவிற்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த சுரேஷ், தனது மனைவியை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே மாணிக்கம் மதியம் தனது மகனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சுரேஷ் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணிக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வேப்பூர் போலீசார் விரைந்து வந்து சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மாணிக்கம், தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்