தேவகோட்டை,
தேவகோட்டை தாலுகா காவதுகுடி கிராமத்தை சேர்ந்தவர் பூமிநாதன். அவரது மகன் வேலுச்சாமி (வயது 32). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பொண்ணக்கரை அருகே சென்றபோது எதிரே வந்த மேக்கரைக்குடி கிராமத்தை சேர்ந்த குழந்தை என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்து வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.