டிரைவர் பலி

அருப்புக்கோட்டையில் விபத்தில் டிரைவர் பலியானார்.

Update: 2023-07-31 19:11 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 47). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் தாலுகா அலுவலக ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஆட்டோவில் ராமசாமிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர கண்மாயில் பாய்ந்து தலை குப்புற கவிழ்ந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கருப்பசாமியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்