உரிய ஆவணம் இல்லாத ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்ததால்நடுரோட்டில் உடலில் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற டிரைவர்கடலூரில் பரபரப்பு

உரிய ஆவணம் இல்லாத ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்ததால் நடுரோட்டில் உடலில் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-01 18:45 GMT


கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே நேற்று போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை மறித்து போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த ஆட்டோவை மறித்து, அதில் உரிய ஆவணங்கள் உள்ளதா? என ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோவில் எவ்வித ஆவணங்களும் இல்லை. இதனால் போக்குவரத்து போலீசார் அந்த ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே போலீசார் தனது ஆட்டோவை பறிமுதல் செய்ததால் ஆத்திரமடைந்த டிரைவர், அதில் இருந்த டீசலை எடுத்து நடுரோட்டில் நின்று கொண்டு தனது உடலில் ஊற்றினார். பின்னர் அவர் அவ்வழியாக வந்த வாகனங்களை மறித்ததுடன், தீ குளிக்க முயன்றதாக தெரிகிறது. இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் அவ்வழியாக சென்ற பொதுமக்கள், அந்த டிரைவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, ஆட்டோ டிரைவரை பிடித்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். நடுரோட்டில் நின்று கொண்டு ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் சுமார் ¼ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்