டிரைவர் தவறவிட்ட பணத்தை மீட்டு ஒப்படைத்த போலீஸ் ஏட்டு

டிரைவர் தவறவிட்ட பணத்தை போலீஸ் ஏட்டு ஒப்படைத்தார்.

Update: 2023-06-03 19:39 GMT

மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். அரசு பஸ் டிரைவரான இவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு காதணி விழா நடத்துவதற்காக, அவரது சகோதரரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மணப்பாறை பஸ் நிலையத்திற்கு வந்து பார்த்தபோது, பணம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம், பக்கத்தில் தேடியும் பணம் கிடைக்காத நிலையில் இது தொடர்பாக மணப்பாறை போலீசில் புகார் அளிக்க சென்றார்.இதற்கிடையே பஸ் நிலையத்தில் ரூ.50 ஆயிரம் கிடந்ததை அறிந்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு நாராயணன் அந்த பணத்தை எடுத்துச்சென்று போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கோபி, கணேசன் மற்றும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ் ஏட்டு நாராயணன் ஆகியோர் ராஜ்குமாரிடம் அந்த பணத்தை ஒப்படைத்தனர். அவர் ஏட்டு நாராயணன் மற்றும் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் நாராயணனை போலீஸ் துணை சூப்பிரண்டு பாராட்டி, வெகுமதி வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்