கூர்மையான கம்பி 'கை'யில் பாய்ந்து சிக்கி தவித்த டிரைவர்

வீட்டு கேட்டில் ஏறி குதித்த போது கூர்மையான கம்பி ‘கை'யில் குத்தி பாய்ந்ததால் கையை எடுக்க முடியாமல் டிரைவர் தவித்தார். தீயணைப்பு படையினர் போராடி மீட்டு அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

Update: 2023-07-26 18:45 GMT

களியக்காவிளை:

வீட்டு கேட்டில் ஏறி குதித்த போது கூர்மையான கம்பி 'கை'யில் குத்தி பாய்ந்ததால் கையை எடுக்க முடியாமல் டிரைவர் தவித்தார். தீயணைப்பு படையினர் போராடி மீட்டு அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

டிரைவர்

களியக்காவிளை பனங்காலை பகுதிையச் சேர்ந்தவர் ஆன்ரூ வின்ஷ் சேம் (வயது42). வெளிநாட்டில் டிரைவராக பணியாற்றி வந்தார். தற்போது சொந்த ஊர் திரும்பி உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது, வீட்டின் காம்பவுண்டு கிரில் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால், வெளியே நின்றபடி கதவை திறக்க முயன்றும் முடியவில்லை.

கையில் குத்திய இரும்பு கம்பி

இதையடுத்து வேறு வழியின்றி கேட்டில் தாவி குதிக்க ஆன்ரூ வின்ஷ் சேம் முடிவு செய்தார். அதன்படி அவர் கேட்டில் ஏறி தாவி குதிக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக கிரில் கேட்டில் அமைக்கப்பட்டிருந்த கூர்மையான கம்பி அவரது கையில் குத்தி உள்ளே புகுந்தது. இதனால் ஆன்ரூ வின்ஷ் சேம் வலி தாங்க முடியாமல் அலறினார். உடனே அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

பின்னர் இதுபற்றி குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

கம்பியுடன் சிகிச்சைக்கு...

தீயணைப்பு வீரர்கள் ½ மணிநேரம் போராடி ஆன்ரூ வின்ஷ் சேம் கையில் குத்தியிருந்த கம்பியுடன் கிரில் கேட்டின் ஒரு பகுதியை எந்திரத்தின் மூலம் வெட்டி எடுத்தனர். பின்னர் கையில் குத்திய கம்பியுடன் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்