இந்தி திணிப்பை கண்டித்து திராவிட மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்பை கண்டித்து திராவிட மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து நேற்று கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாணவர் கழக தலைவர் பெரியார் செல்வம் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட தலைவர் குமாரசாமி, செயலாளர் காளிமுத்து, மாநில சட்டத்துறை இணை செயலாளர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.