வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் கொள்ளை

வள்ளியூரில் வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2022-12-12 19:22 GMT

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் தெப்பக்குளத்தை அடுத்த கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் செல்வன் (வயது 44). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நிறுவனத்தில் தனது பணிகளை முடித்துக் கொண்டு வீட்டில் சுமார் 11 மணி அளவில் தூங்கச் சென்றுள்ளார். காலை 5 மணி அளவில் பாஸ்கர் செல்வன் எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் 55 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றுவிட்டது தெரியவந்தது.

மேலும் அதே பகுதியில் மற்றொரு வீட்டிலும் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்தது. அப்போது வீட்டில் உள்ள பெண் எழுந்து கூச்சலிட்டதால் திருடன் தப்பிச் சென்றுவிட்டான். இவ்விரு சம்பவங்கள் குறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்