வீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகை திருட்டு

நாகை அருகே வீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update: 2022-10-03 18:45 GMT

சிக்கல்:

நாகை அருகே பொரவச்சேரி ஊராட்சி புதுத்தெருவைச் சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன்.இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.இவருடைய மனைவி அரபு நிஷா, தாயார் நசிமாபேகம்மற்றும் குடும்பத்தினர் வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த 1-ந்தேதி இரவு நசீமாபேகம், அரபு நிஷா மற்றும் குடுமபத்தினர் வீட்டை பூட்டிவிட்டு அடுத்த தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் பின்புறம் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் நசீமாபேகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போதுகதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்