வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் திருட்டு

வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகத்தில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

Update: 2023-02-20 18:45 GMT

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகத்தில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

பணம், நகை திருட்டு

வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம், குட்டிதேவன்காட்டில் வசித்து வருபவர் கரிகாலன் (வயது 64) விவசாயி. இவர் கடந்த 13-ந்தேதி தனது மனைவி விஜயாவுடன், சென்னையில் உள்ள தனது மகள் சரண்யா வீட்டிற்கு சென்று உள்ளார்.

பின்னர் அவர் நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவை உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டுஅதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. மேலும் மர்மநபர்கள் அந்த வீட்டில் மதுகுடித்து விட்டு சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த வாய்மேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர், திருட்டு நடந்த வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தார்.

இதுதொடர்பாக கரிகாலன் கொடுத்த புகாரின் பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், வாய்மேடு சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்