வீட்டின் கதவை உடைத்து5 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து5 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது.
திருமயம் அருகே கடியாப்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் செட்டியார். இவர் சிங்கப்பூரில் இருந்து வருகிறார். இவரது வீடு புதுக்கோட்டை 4-ம் வீதியை சேர்ந்த அருணாச்சலம் (வயது 60) என்பவர் பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில் அருணாச்சலம் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக வெளியூருக்கு சென்று விட்டு மீண்டும் கடியாப்பட்டியில் உள்ள பழனியப்பன் செட்டியார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது அந்த அறையில் இருந்த 5 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அருணாச்சலம் திருமயம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.