திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள டாக்டருக்கு செங்கம் அருகே உள்ள கல்லாத்தூர் பகுதியில் பண்ணை வீடு உள்ளது. அங்கு டாக்டரின் தாய் ராஜேஸ்வரி (வயது 75) வசித்து வருகிறார்.
ராஜேஸ்வரிக்கு 3 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து ராஜேஸ்வரியை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.
அதிகாலையில் பணியாட்கள் வேலைக்கு வந்த போது ராஜேஸ்வரி கட்டி வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.