ரெயில்நிலையம் அமைய உள்ள இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

திண்டிவனம்- நகரி இடையேயான ரெயில்பாதை திட்டத்தில் சோளிங்கர் அருகே ரெயில் நிலையம் அமைய உள்ள இ’த்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2022-07-29 17:43 GMT

திண்டிவனம்- நகரி இடையேயான ரெயில்பாதை திட்டத்தில் சோளிங்கர் அருகே ரெயில் நிலையம் அமைய உள்ள இ'த்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.

திண்டிவனம்- நகரி ரெயில்பாதை

திண்டிவனம் - நகரி ரெயில் பாதை திட்டம் 2006-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த புதிய ரெயில் பாதை ரூ.498 கோடியில் 184 கிலோ மீட்டர்தூரத்திற்கு அமைக்க திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக சோளிங்கர் தக்கான்குளம் அருகே அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து திண்டிவனம் -நகரி இடையே ரெயில்வே பாலங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. சில இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு முடியும் தருவாயிலும், சில இடங்களில் பாலத்தின் பணிகள் தொடங்கப்பட்டு பாதியிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 16 ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. திண்டிவனம்- நகரி ரெயில் பாதை விரைந்து அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

இந்தநிலையில் நேற்று சோளிங்கர் கருமாரியம்மன் கோவில் அருகே மலைப்பகுதியில் உள்ள குளம் மற்றும் கீழாண்டை மோட்டூர் வழியாக திண்டிவனம்-நகரி இடையே புதிதாக ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையம் அமையவுள்ள இடத்தை ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ரெயில்பாதை மற்றும் ரெயில் நிலையம் அமையவுள்ள இடத்தில் எவ்வளவு விவசாய நிலங்கள் உள்ளன என ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து கீழாண்ட‌மோட்டூர் அங்கன்வாடி மையம், அரக்கோணம் சாலையில் உள்ள அரசினர் பிற்படுத்தப்பட்டோர் நல மகளிர் விடுதி, கொண்டபாளையத்தில் உள்ள மகளிர் விடுதிகளில் பதிவேடு, உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தாசில்தார் கணேசன், வருவாய் ஆய்வாளர் சதிஷ், கிராம நிர்வாக அலுவலர் ஜெயவேலு, கிராம உதவியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்